அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன், சாபாவில் 60விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடங்களை இழக்கும் சாத்தியம் இருப்பதாக சாபாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
பிஎன் இப்போது வைத்துள்ள 22இடங்களில் 14-ஐ இழக்கலாம் என்று யுஐடிஎம் சாபா விரிவுரையாளர் ஆர்னல்ட் புயோக் கூறினார்.
கோத்தா கினாபாலு, சண்டாகான், பென்சியாங்கான் ஆகிய தொகுதிகளில் மாற்றரசுக்கட்சிகள் “எளிதில்” வெற்றிபெறும்.
“ ‘நிரந்தர வைப்புத்தொகை’ என்பதெல்லாம் நீடித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை”, என்றாரவர்.சாபாவும் சரவாக்கும் காலம்காலமாக பிஎன் கோட்டைகளாக திகழ்ந்து வந்ததால் அவற்றை ‘fixed deposit’ என்று குறிப்பிடுவது வழக்கம்.
தேசிய பேராசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுத் தேர்தல்மீதான வட்டமேசை கலந்துரையாடலில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.