புலிகளுக்கு எதிரான தடையை மேலும் நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் துறையின் புதிய அறிக்கைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது.

2011ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் துறையின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட போதிலும் புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.

2011ஆம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடு தலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச மற்றும் நிதி வலையமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிதி வலையமைப்பை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தற்போதைக்கு மீள ஒழுங்கிணையக் கூடிய அபாயம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: