சிறுமி மீது பாலியல் வல்லுறவு: சிங்கள புத்த பிக்கு கைது

பிரிட்டனில் உள்ள முன்னணி சிங்கள புத்த பிக்கு ஒருவர் மீது ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை இலண்டனில் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இலண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான பகலஹம சோமரட்ண தேரோ என்பவர் மீது செப்டம்பர் 12-ம் தேதி பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

16 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணின் மீதான இந்த பாலியல் வல்லுறவும் மேலும் மூன்று பாலியல் ரீதியான தாக்குதல்களும் இலண்டனில் செல்வந்தர்கள் வாழும் புறநகர் பகுதியான சிஸ்விக் பகுதியில், 1977-ம் ஆண்டுக்கும் 1978-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அவர், செப்டம்பர் 23 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TAGS: