தீர்வு கிடைக்காவிடில் மக்கள் போராட்டம் வெடிக்கும்: TNA

“இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்கும் என்று நம்புகின்றோம். தவறினால் ஜனநாயக ரீதியாக எம் மக்களை அணி திரட்டி தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் நடத்தப்படும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட அரசியல் பணிமனை, பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்தான் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்னைத் தீர்வ பற்றிப் பேச வேண்டும் என்று அனைத்துலக அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.