கொழும்பு : இலங்கைக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்க சீனா எப்போதுமே தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு துறை அமைச்சர் லியாங் குவாங்லீ கூறியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாங் குவாங்லீ, தலைநகர் கொழும்புவில் பத்திரிகையாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியதாவது,
தெற்காசிய நாடுகளில், சீனாவிற்கு உற்ற நண்பனாக இலங்கை உள்ளது. இலங்கை மீது , மற்ற எந்தவொரு நாடும் தாக்குதல் நடத்தாதது பொருட்டு, அதன் இராணுவ வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்யும். இலங்கை இராணுவ வீரர்களுக்கு தேவையான பயி்ற்சிகளை வழங்கவும் சீனா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.