“நிபுணத்துவப் போலீஸ் படை தனது அறிக்கைக்கு ஆதரவாக தெளிவான புள்ளி விவரங்களை வெளியிடும். படைக்கு ஆதரவாக வெறுமனே மறுப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.”
“பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது”
ரிக் தியோ: புக்கிட் அமான் சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் முகமட் பாக்ரி ஜினின் அவர்களே, அபத்தமாக பேச வேண்டாம்.
பக்காத்தான் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல் சம்பவங்களையும் அவர்களது படங்கள் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகளையும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் போலீஸ் புலனாய்வு செய்துள்ளது என்றால் தவறு செய்தவர்கள் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை ?
ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவமதித்தவர்கள் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்டது. ஏன் இந்த வேறுபாடு ? பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டை நோக்கி தங்கள் பிட்டத்தை காட்டிய முன்னாள் இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டினீர்களா என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம்.
1234567: 2009ம் ஆண்டு தொடக்கமா ? உண்மையில் அவை மிகவும் கடுமையான விவகாரங்களாக இருக்க வேண்டும்.
ஒஹாக்கிம்: நிபுணத்துவப் போலீஸ் படை தனது அறிக்கைக்கு ஆதரவாக தெளிவான புள்ளி விவரங்களை வெளியிடும். படைக்கு ஆதரவாக வெறுமனே மறுப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
விஜார்ஜ்மை: வழக்கமான நடைமுறைகளின் கீழ் அவர்கள் விசாரணைக்கு கோப்பைத் திறந்திருக்க வேண்டும்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட எந்த சம்பவத்தையும் பாக்ரி தராததால் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தபிரமுகர்கள் அவமதிக்கப்பட்ட சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று தான் கருத வேண்டும்.
காலுய் 64: அந்த 10 சம்பவங்கள் மீது மேல் நடவடிக்கை இல்லை “NFA (no further action)”. ஆகவே எதிர்க்கட்சித் தலைவர்களுடைய படங்கள் மீது சிறுநீர் கழிப்பது சரியா ?
அவர்களது படங்களை எரிப்பதும் சரியா ? முதலமைச்சர் படத்திற்கு மலர் வளையும் வைப்பதும் சரியா ? கொம்தாருக்கு மலத்தை பிரதிபலிக்கும் மாதிரிகளை அனுப்புவதும் சரியா ? பினாங்கில் பெர்க்காசா உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்தை நிறுத்தி வைப்பதும் சரியா ?
பக்காத்தான் தலைவர்கள் பாதிக்கப்பட்டால் அவை எல்லாம் சரியே. மலேசிய மக்கள் கல்வி கற்றவர்கள். அவர்களுக்குச் சிந்திக்கவும் தெரியும்.
அரச மலேசியப் போலீஸ் படையின் கடமைகள், பொறுப்புக்கள் பற்றிய விதிமுறைகளை பாக்ரி மீண்டும் வாசிப்பது நல்லது.
Ex-wfw: தன் வினை தன்னைச் சுடும். பாரபட்சம் காட்டுவதாக யாரையும் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
பிடிஎன்: பக்காத்தான் புகார் செய்த எல்லா சம்பவங்களை போலீஸ் விசாரித்திருக்கும். ஆனால் அவசரம் தேவையில்லை என முடிவு செய்து அவை KIV (kept in view) செய்யப்பட்டிருக்கலாம். மற்ற சிறிய விஷயங்களுக்குக் கீழ் போடப்பட்டிருக்கலாம். நமது போலீஸ் ‘அரச’ போலீஸ் படை என அழைக்கப்படுவதை மறக்க வேண்டாம்.
எரிக் கோய்: பிகேஆர் தலைவர்கள் அம்னோ பற்றி கூறிய ‘பொய்கள்’ அந்தச் சம்பவங்களுக்குக் காரணம் என புலனாய்வு முடிவுகள் பக்காத்தான் தலைவர்களையே சுட்டிக் காட்டும் என நான் நிச்சயமாக கருதுகிறேன். ஆகவே சந்தேகத்துக்குரியவர்கள் சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என தீர்மானிக்கப்படும். ஹா, ஹா, ஹா, பாரபட்சம் இல்லையா ? வேடிக்கை தான் !
மலேசிய இனம்: பாக்ரி இப்போது ஏன் அதனைச் சொல்கின்றீர்கள் ? அது நிகழ்ந்த பின்னர் அப்போதே சொல்லியிருக்கலாமே ? பிரதமரை ‘அவமதித்ததற்காக’ ஒர் இளைஞர் மீதும் இளம் பெண் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுத்த பின்னர் ஏன் சொல்ல வேண்டும் ?
Q..!: பாக்ரி அவர்களே நீங்கள் குற்றம் சாட்டியவர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் பட்டியல் போட்டுத் தர முடியுமா ? முடியாது என்றால், கதை விடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
லூயிஸ்: போலீஸ் இரண்டு வகையான தரத்தை பின்பற்றவில்லை என முட்டாள்களே கூறுவர். ஆனால் எல்லா மலேசியர்களும் முட்டாள்கள் அல்ல.
பையுவன்செங்: எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியும். ஆண்டவனுக்குத் தெரியும்.