பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாவிடின் இலங்கைக்கு நெருக்கடி : ராபர்ட் பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறினால் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை இலங்கைக்கு ஏற்படும் என அமெரிக்காவின் தெற்காசிய இராஜாங்கச் செயலாளர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.

இருநாள் பயணமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் மாலை இலங்கை சென்றுள்ள ராபர்ட் பிளேக், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.௭ல். பீரிஸ், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதிபாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீளக்குடியேற்றப்படாமை, வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல், தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விவகாரம், காணாமல் போயுள்ளவர்களது விடயம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம், உட்பட பல விடயங்கள் குறித்து பிளேக் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டடைப்பின் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறினால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை தோன்றலாம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ராபர்ட் பிளேக் கூறினார்.

TAGS: