புத்ராஜெயாவுக்கு செல்வதற்கு பக்காத்தான் மகளிர் சக்தியைப் பயன்படுத்தும்

பக்காத்தான் ராக்யாட் தனது மகளிர் பிரிவுகளுக்கான நடவடிக்கை திட்டங்களை உள்ளடக்கிய ‘ஆரஞ்சுப் புத்தகத்தை’ நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சியில் மகளிர் வாக்குகளை பயன்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும்.

மலேசிய மகளிருக்கான நடவடிக்கை திட்டம் என குறிக்கப்பட்டுள்ள அதனை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்து வைத்தார்.

புத்ராஜெயாவை வெற்றி கொள்ள முடியும் என பக்காத்தான் உறுதியாக நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறிய அவர், என்றாலும் பெண் வாக்காளர்களிடமிருந்து “சிறிதளவு உந்துதல்” தேவைப்படுவதாக சொன்னார்.

“இந்த நேரத்தில் இந்த வினாடியில் டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவற்றில் உள்ள நமது நண்பர்களுடன் இணைந்து நாம் புத்ராஜெயாவை வெற்றி கொள்ள இயலும் நான் நம்புகிறேன்.”

என்றாலும் நமக்கு நகர்ப்புறங்களிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்தும் சிறிதளவு உந்துதல் தேவை. பெண்கள் சமூகத்திடமிருந்து அது அதிகமாகத் தேவைப்படுகின்றது,” என்றார் அன்வார்.

பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் பெண்களுடைய வலிமையை உயர்த்துவதற்கு ஏழு முக்கிய அம்சங்களை அந்த மலேசிய மகளிருக்கான நடவடிக்கை திட்டம் விவரிக்கிறது.

TAGS: