மேலாடை இன்றி இளவரசி கேத் மிடில்டனின் படங்கள் அட்டைப் படமாக பிரசுரம்!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அண்மையில் தனது மனைவி கேத் மிடில்டனுடன் பிரான்ஸ் சென்றிருந்தார்.  அப்போது தலைநகர் பாரீசில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் தங்கியிருந்தபோது இளவரசி கேத்மிடில்டன் மேலாடை இன்றி இருந்த புகைப்படத்தை பிரான்ஸ் பத்திரிக்கை அட்டை படமாக பிரசுரித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது அடங்குவதற்குள் அயர்லாந்தை சேர்ந்த பத்திரிக்கையும், கேத் மிடில்டன் மேலாடை இன்றி இருந்த புகைப்படங்களை வெளியிட்டது. இதற்கிடையே, இத்தாலியை சேர்ந்த ‘ஷி’ என்ற பத்திரிக்கை கேத்மிடில்டனின் மேலாடை இல்லாத புகைப்படங்களுடன் 26 பக்க சிறப்பு மலர் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இது இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுபோன்ற புகைப்படங்கள் மேலும் பல நாட்டு பத்திரிக்கைகளில் பிரசுரமாகாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அறிவிக் கப்பட்டது.

இந்த நிலையில் கேத்மிடில்டனின் ஆபாச படங்களை பிரசுரிக்க பத்திரிக்கைகளுக்கு தடை விதிக்கும்படி பாரீஸ் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது இளவரசர் வில்லியம், தனது மனைவி இளவரசி கேத்மிடில்டனுடன் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர்களின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அது இன்று விசாரணைக்கு வருவதாகவும் அரண்மனை செய்தி தொடர்பாளர் செயின்ட் லேம்ஸ் தெரிவித்துள்ளார்.

இளவரசி கேத் மிடில்டனின் ஆபாச புகைப்படங்களை பிரசுரித்த பத்திரிகைக்களுக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஜான்மேஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.