போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதிக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்ததின் தொடர்பில் தனக்கு ஏற்பட்ட கடனைத் தீர்ப்பதற்குக் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு Kuala Dimensi Sdn Bhd தாம் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை பயன்படுத்தியுள்ளது தமக்குத் தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் கூறுகிறார்.
அமைச்சர் என்ற முறையில் லிங்-கின் கடைசி நாளான 2003ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டதாக இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டத்துக்கான முழுக் குத்தகையாளரான KualaDimensi, கடன் பத்திரங்களை ‘AAA’ மதிப்பில் வெளியிடுவதற்கு ஆதரவுக் கடிதம் வகை செய்யும் என்பது தமக்குத் தெரியாது என்றும் லிங் சொன்னார்.
அந்தக் கடிதம் MIMB என்ற Malaysian International Merchant Bankers-க்கும் Koperasi Pembangunan Pulau Lumut Bhdக்கு தான் கொடுக்க வேண்டிய 380 மில்லியன் ரிங்கிட் கடனைத் தீர்க்கவும் ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள நிலத்தின் மீதான தடைகளை அகற்றவும் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்காக Kuala Dimensi அமைத்த சிறப்பு நிறுவனமான PTB Unit Trust-க்கும் அந்தக் கடிதம் வெளியிடப்பட்டது.
அரசாங்கத்தை ஏமாற்றியதாக கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்வாதம் செய்யும் லிங்-கை துணை தலைமை வழக்குரைஞர் II துன் அப்துல் மஜிட் துன் ஹம்சா குறுக்கு விசாரணை செய்தார்.