தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றிய சர்ச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய, அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பற்றி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இதை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்ததாகவும், இப்போது போருக்குப் பின்னர் இதற்கான அவசியம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளும் இதற்கு இணங்கினாலும், தமிழரசுக் கட்சி மட்டும் இதற்கு உடன்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். எனவே கூட்டமைப்பு பல்வேறுபட்ட தமிழ் கட்சிகளின் ஒரு “தளர்ச்சியான கூட்டணியாகவே” இருந்து வருவதாகவும் இது தமிழர்களின் அரசியல் நலன்களுக்கு வலு சேர்ப்பதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

TAGS: