போதைப் பொருள் விற்கும் இலங்கை அமைச்சர்: விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கையில் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய நபராக அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுவருவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் தேதி இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்றினிஸ், A leaked US embassy cable reviled “drug kingpins in SriLanka have political patrons in the government” என்ற தலைப்பில் அனுப்பியிருந்த இராஜதந்திர தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் சுட்டிகாட்டியுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இவர்களில் பிரதான முக்கிய நபராக அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் காட்டி அவர்களை ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக சில்வா ஆகியோர் ‘எக்டாஸி’ என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: