யாழ்பாணம்: இலங்கையின் வடக்கு பகுதியில் அடுத்த ஆண்டுக்குள், 250 கி.மீ.,தூர ரயில்பாதை சீரமைக்க இந்திய ரயில்வேத்துறை, 4,500 கோடி இந்திய ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இல்ஙகை இராணுவத்துக்கும் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக நடந்த போரினால் வடக்கிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. போர் நடந்த காலத்தில், சிங்கள இராணுவம் தங்கள் பகுதிக்குள் நுழைய கூடாது என்பதற்காக விடுதலைப் புலிகள், சகட்டு மேனிக்கு கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.
இலங்கையில், போர் நடைபெறுவதற்கு முன், வடக்கு பகுதியில் 250 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில், மீண்டும் ரயில் பாதைகளை அமைக்க இந்திய நுழைந்திருப்பது இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுபடுத்ததான் எனவும் கூறப்படுகிறது.