பிரிட்டன் தமிழர்களுக்கு அந்நாட்டு ஆளுங்கட்சி கொடுத்த அங்கிகாரம்!

லண்டன்: பிரிட்டனின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, தனது கட்சிக்கான துணை கட்சியாக பிரிட்டன் வாழ் தமிழர்களின் ‘பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சி’க்கு அங்கிகாரம் கொடுத்துள்ளது.

பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் நிறைந்துள்ளனர். இதில் ஆளுங்கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இதுதொடர்பான நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு இன மக்கள் வாழும் இங்கிலாந்தில் தமிழர் தரப்பிற்கு கிடைத்த முதலாவது உரிமை என்று இதனை சொல்லலாம்.

இதனூடான தமிழர்கள் தரப்பு விஷயங்களை நாடாளுமன்றம் வரை கொண்டுசென்று அதன் மூலமாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான பிரிட்டன் அரசின் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிக்காகவும் நீண்ட காலமாக அயராது உழைத்து வந்த ஹேஸல் வெயின்பர்க் மற்றும் கரண் பால் ஆகியோரின் முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இது கருதப்படுகிறது.

இதில் முக்கியமானது, இதுவரை இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த லியாம் பாக்ஸ், தற்போது தமிழர்களுக்கு ஆதரவாக நட்பாக மாறியிருப்பதுதான்.

TAGS: