இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்

யேர்மனியில் நடைபெற்று வரும் உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் யேர்மனி வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் ஜேர்மன் மொழியில் “Damit wir nicht vergessen…” Massaker an Tamilen 1956–2008 எனும் தலைப்பில் நேற்று ஜேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது

இந்நூலை ஜேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் இப்புத்தக கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு இப் புத்தகத்தை வெளியீடு செய்துவைத்தார். அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ், தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் ரொபின்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந் நூல் யேர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும், உயர்கல்விக் கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று வெளியீட்டார்கள் அறிவித்துள்ளார்கள்.

புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைகளை புகலிட நாட்டு அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

TAGS: