இலங்கையில் சீனா கட்டும் விமான நிலையத்தில் வெள்ளோட்டம்

கொழும்பு: இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டம் சீன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பன்தோட்டா விமான நிலையத்தில் நேற்று வெள்ளோட்டமாக விமானம் பறக்க விடப்பட்டது.

சிங்களவர்கள் அதிகமாக வாழும் பின்தங்கிய மாவட்டமான ஹம்பன்தோட்டா பகுதியை சர்வதேச அளவில் உயர்த்த அதிபர் ராஜபக்ஷே முயற்சித்து வருகிறார்.

சீனா உதவியுடன் இங்கு துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை, சர்வதேச பொருளாதார மையமாக்குவதற்காக இரண்டாவது பெரிய விமான நிலையம், சீனாவின் உதவியுடன் 1,200 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு, இந்த விமான நிலைய பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில், ஒரு விமானத்தை கொண்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

ஹம்பன்தோட்டா மாவட்டம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: