மலேசிய கப்பலை கைப்பற்றுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மலேசிய கொடியை தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைப்பற்றுவதற்கான பிடியாணை ஒன்றை இலங்கையின் கொழும்பு உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.

கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஒன்றில் கூறப்பட்டுள்து.

இந்த கப்பலில் பணிபுரிந்த 15 பேரின் சார்பில் கனகசபை பூபாலசிங்கம் என்பவர் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் கப்பலின் உரிமையாளர்கள், தற்போதைய ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்கவும், மனுதாரர்களின் சம்பளத்தை வழங்காமல், கப்பலை இலங்கைக்கு அப்பால் கொண்டுசெல்லவும் தயார் செய்வதாக மனுதாரர்களின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்ததுடன் இந்த கப்பலை கைது செய்ய ஆணை பிறப்பிக்குமாறு அவர் கேட்டுகொண்டார்.

மனுதாரர்களின் வழக்குரைஞரின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி ஜயதிலக  கப்பலை கைப்பற்றுவதற்கான  பிடியானையை பிறப்பித்தார்.

TAGS: