விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியொருவர் பிரான்ஸில் சுட்டுக்கொலை!

நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி என்பவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சிங்கள அரசின் கைக்கூலிகள் என நம்பப்படும் உந்துருளியில் வந்த முகமூடி அணிந்திருந்த இருவர் – பரிதிமீது மூன்றுமுறை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனைக்கு வெளியில் இச்சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இக்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருதாக தெரியவருகிறது.

இதேவேளை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் தனது இரண்டு பணியாளர்களுடன் வீடு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பரிதியை பணிமனைக்கு வெளியே இனந்தெரியா குழுவொன்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தது; எனினும், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பாட்டார்.

மாவீரர் நாள் நெருங்கி வரும் இவ்வேளையில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருப்பது புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் துயர அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

TAGS: