சிங்கள இராணுவத்திற்கு தமிழர்களை இணைப்பது நல்லிணக்கமல்ல: மனோ எம்பி

இலங்கையின் வடகிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுக்கின்றது. எனவே அராசங்கத்தின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வடக்கில் இராணுவத்தை குறைத்து போலிஸ் துறைக்கு தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய தேவையாகும். எனினும் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கூட கவனத்தில் கொள்ளாது தன்னிச்சையாக செயற்படுகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் – 7இல் அமைந்துள்ள அசாத்சாலி மன்றத்தில் இன்று, ‘அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டின் போதே நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்.

TAGS: