பக்காத்தான் ரக்யாட் முன்வைத்துள்ள கொள்கைகளால் நாடு ஒன்றும் நொடித்துப் போகாது ஆனால், அரசாங்கத்தின் ஊழல்களில் பணம் தொடர்ந்து விரயமாவதுதான் நாட்டை “நொடிப்பு நிலைக்கு”க் கொண்டு செல்லும் என்கிறது டிஏபி.
“பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் ஊழல்களைப் பார்க்கையில், அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், வரம்புமீறிய இதே ஊதாரித்தனம் தொடர்ந்து நாடு ‘நொடித்துப்போகும்’ நிலை உருவாகும்”, என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அம்னோ பேரவையில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்முரையில் பக்காத்தானை ஆட்சியில் அமர்த்தினால் அதன் கொள்கைகளால் நாடு நொடித்துப்போகும் என்று கூறியதற்கு எதிர்வினை ஆற்றிய புவா இவ்வாறு கூறினார்.