பிரதமர் நஜிப் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக வணிகர் தீபாக் ஜக்கிஷான் விடுத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடி அவ்வாறு எதுவும் செய்யவில்லை.
மாறாக, அம்னோ பொதுக்கூட்டத்தை முடித்து வைக்கும் அவரது 20 நிமிட உரையில், ஸாகிட், நஜிப்பின் வெளிநாட்டு உறவுகள் குறித்த முயற்சியினைப் பாராட்டிப் பேசினார். அதன் பின்னர், எதிர்க்கட்சிகளைச் சாடத் தொடங்கினார். ஆனால், தீபாக்கின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லை.
தீபாக்கின் குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளிக்கப் போவதாக ஸாகிட் நேற்று மலேசியாகினியிடம் கூறினார். ஆனால், அது பற்றி அவர் எதுவும் கூறவே உல்லை.