மீண்டும் குழு அமைக்கிறார் ஐநா செயலாளர் பான் கீ மூன்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையை, மதிப்பீடு செய்து அதன் பரிந்துரைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழுவொன்றை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார்.

ஐ.நாவின் பிரதிச் செயலர் ஜோன் எலியாசன் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும்படி கேட்கப்பட்டுள்ளதாக, ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்க்கி தெரிவித்தார்.

இலங்கையின் போர்க் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயற்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இதன்காரணமாவே அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் அதிகாரி சார்ல்ஸ் பெற்றீ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளுக்காக வருத்தம் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே குறித்த அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலியாசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக மார்டின் நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்னையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடிதம் எழுதி எழுதியே தமிழர்களுக்கு பட்டை நாமம் போட்டார். தற்போது அவருக்கு ஈடாக குழுக்கு மேல் குழு  அமைக்கிறார் இந்த பான் கீ மூன்!

TAGS: