‘தமிழ் மாணவர்களுக்கெதிரான அடக்குமுறை முட்டாள்தனமானது’

இலங்கையின் வடக்கே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளுகளினால் அனைத்துலக ரீதியில் மேலும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையே இலங்கைக்கு ஏற்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு மனித உரிமைகள் பிரச்னைகள் இலங்கைக்கு எதிராக காணப்படுகின்றன. இவற்றை எதிர் கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளாமல் அனைத்துலக அழுத்தங்களையும் தலையீடுகளையும் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றமை நாட்டின் நிலையான பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்றும் அவ்வியக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த பண்டார கூறுகையில்; அனைத்துலக நாடுகளின் கழுகுப் பார்வையில் இலங்கை உள்ளது. இதனை மறுக்க யாராலும் இயலாது. குறிப்பாக மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கும் முயற்சிகள் காணப்படுகையில் அதனை முறியடிக்க தேவையான சூழலையே உள்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

TAGS: