டாக்டர் மகாதீர் அவர்களே யார் நன்றாக செயல்பட்டனர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்

maha‘இந்த நாடு இப்போது எதிர்நோக்கும் பல இன்னல்களுக்கு மகாதீருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளே காரணம்’

டாக்டர் மகாதீர்: நன்றாக செயல்படாத யாருக்கும் எதிராகவும் நான் பேசுவேன்

அமைதி இல்லாத_சுதேசி: புரோட்டோன் மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்த கருத்துக்களை முதலில் ஆராய்வோம்.

பல பெரிய கார் நிறுவனங்கள் சாத்தியமான பிரச்னைகள் தென்படும் போது தாங்களாகவே முன் வந்து தங்கள் கார்களை திருப்பி அழைக்கின்றன.

அந்த நாடுகளில் அந்தக் கார்களை வாங்குவதா வேண்டாமா என்பதை பயனீட்டாளர்கள் முடிவு செய்ய இயலும். ஆனால் மலேசியாவில் புரோட்டோன் தனது கார்களில் தொடரும் பிரச்னைகளை ( பொறியியல் அல்லது பொருள் கோளாறு) அலட்சியம் செய்கிறது. அதற்குத் தீர்வு காண்பதை பயனீட்டாளர்களிடமே விட்டு விடுகின்றது.

விலை வேறுபாடுகள் கணிசமாக இருப்பதால் மக்களுக்கு உண்மையில் தேர்வுக்கான வாய்ப்புக்கள் கிடையாது.  ஆகவே அவரது வாதம் இது தான்: “புரோட்டோன் கார்களை திருப்பி அழைக்காததால் அவை நல்ல கார்களாக இருக்க வேண்டும்.”

ஆனால் தனது அனைத்து மாதிரிகளில் சரி செய்யப்படும் பழுதுகள் எண்ணிக்கையை புரோட்டோன் தர முடியுமா ? அந்த மாதிரிகளில் காணப்படும் பொதுவான பழுதுகளை அறிய அந்த எண்ணிக்கை உதவும்.

மிலோசெவிச்: அந்த அம்னோ ஏஜண்டு தம்மை அரசியல் மூதறிஞராகக் காட்டிக் கொள்ள முயலுகிறார். பிஎன்   வெற்றி பெற வேண்டும் என்ற விரக்தியில் அவர் போராடுகிறார். அது நடக்கவில்லை என்றால் அவரது கடந்த கால தவறான கொள்கைகள் அம்பலமாகி விடும் என அவர் அஞ்சுகிறார். அரசமைப்புக்கு உட்பட்ட மலாய்க்காரர்களாக மாறுவதற்கு சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை நாட்டுக்குள் கொண்டு வந்து குவித்தது,  தம்மைப் போன்ற திருடும் அரசமைப்பு மலாய்க்காரர்களுக்கு ஆதரவு அளித்தது போன்ற விஷயங்களும்  அவற்றுள் அடங்கும்.

அப்சலோம்: “நன்றாக செயல்படாத யாருக்கு எதிராகவும் நான் பிரச்சாரம் செய்வேன். என் எண்ணப்படி பாக்  லா நன்றாக செயல்படவில்லை,’ என மகாதீர் சொல்கிறார்.

நல்லது. என் கருத்துப்படி மோசமாக செயல்படுவது, மக்களிடமிருந்து திருடுவது, ஓய்வு பெற்ற பின்னர் காணாமல் போகாமல் இருப்பது ஆகியவற்றை விட நன்றாக செயல்படாமல் இருப்பதே சிறந்தது.

அடையாளம் இல்லாதவன்#33877536: பாக் லா உண்மையில் கண்ணியமான மனிதர். பதவியிலிருந்து ‘வலுக்கட்டாயமாக’ வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் எதிலும் சம்பந்தப்படவில்லை. பத்திரிக்கை அறிக்கைகளையும் விடுத்தது இல்லை. ஆனால் டாக்டர் மகாதீர் அவரைக் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். பாக் லா அந்த மனிதரை ஒரு போதும் அவமானப்படுத்தியதே இல்லை.

ஸ்டார்ர்: தொடக்க கால மெர்தேக்கா உணர்வையும் மலேசிய சமூகத்தின் கட்டமைப்பையும்  சீரழித்தவர்களைப்  பற்றி என்ன சொல்வது ? மெர்தேக்காவுக்குப் பின்னர் இன, சமய வேறுபாடின்றி எல்லா சமூகங்களுக்கும் நல்ல எதிர்காலத்தைக் காட்டிய இந்த நாட்டை ‘நிர்மாணித்தவர்கள்’ என்பதைக் காட்டிலும் ‘அழித்தவர்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடத்தைப் பெறுவார்.

இந்த நாடு இப்போது எதிர்நோக்கும் பல இன்னல்களுக்கு மகாதீருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளே காரணம்

அவர் நன்றாக செயல்படுவது பற்றி அவர் பேசுகிறார். ஆனால் அது யாருக்காக யாருடைய அளவுகோல் அடிப்படையில் ?  மகாதீருக்கு உண்மை மீது ஏகபோக ஆதிக்கம் இல்லை.

Guna Otak Sikit: 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அன்வார் இப்ராஹிம் பிரதமராவதை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அது நிச்சயம் பரபரப்பைத் தூண்டும்.

அப்போது நீங்கள் இப்போது செய்வதை போல எதனையும் மூடி மறைக்க முடியாது. மீண்டும் சிந்தியுங்கள்.

சின்ன அரக்கன்: நஜிப்பின் செயல் திறன் குறித்து மகாதீர் வேண்டுமானால் மனநிறைவு கொள்ளலாம்.  அவருக்கும் அவரது பிஎன் அரசாங்கத்துக்கும் மகாதீர் எவ்வளவு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் இறுதியில் முடிவு செய்யப் போவது பொதுத் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளே.

TAGS: