ஆஸ்திரேலியாவிலிருந்து 42 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

cocos_refugeeசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடக் கோரிக்கை நிராக்கரிக்கப்பட்ட 42 பேர் இன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செல்லுபடியற்ற விசா மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த இலைங்கையர்களது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக படகு மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றவர்களே புகலிடக் கோரிக்கை மறுக்கபட்டு விசேட விமானம் மூலம் இலங்கைக்குத் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிங்களவர்களும் தமிழர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடத்தில் ஒகஸ்ட் 13ஆம் திகதிக்குப் பின்னர் மாத்திரம் அவுஸ்திரேலியாவில் இருந்து 800-க்கும் அதிகமானோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: