உங்கள் கருத்து: “இப்படிப்பட்ட அபத்தங்களைச் செய்தால் உத்துசானின் பிரசுர உரிமம் பறிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்க வேண்டும்”.
கர்பாலுக்கு இழப்பீடாக ரிம70ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு
விஜய்47: மாற்றரசுக் கட்சியினர் பலர்மீது அவதூறு கூறி அதற்காக தண்டமும் கட்டியுள்ளது உத்துசான் மலேசியா என்பது உண்மைதான். ஆனால், அதற்கெல்லாம் அது கவலைப்படுவது கிடையாது. அதன் எஜமானர்களைத் திருப்திப்படுத்துகிறதல்லாவா, அது போதும் அதற்கு.
இல்லை என்றால், அவதூறு கூறினால், வழக்கு தொடர்வார்கள் என்று தெரிந்தும் தொடர்ந்து அதைச் செய்து வருமா?
இழப்பீடு கொடுப்பதால் அது ஒன்றும் போண்டி ஆகப்போவதில்லை. அப்பணம் எங்கிருந்து வந்ததோ அங்கு இன்னும் நிறையவே இருக்கிறது.
கெண்டேபிரிஜன்: அம்னோவின் அசிங்கமான குரலாக செயல்படும் அது ஏற்படுத்திய சேதத்துக்கு ரிம70,000 ஈடு ஆகாதுதான்.
இனியும் இப்படிப்பட்ட அபத்தங்களைச் செய்தால் உத்துசானின் பிரசுர உரிமம் பறிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்க வேண்டும்.
எஸ்சனிகு: நாட்டில் இரண்டு வகை சட்டங்கள் உண்டு. உத்துசானின் உரிமம் ரத்து செய்யப்படாதது ஏன்? சட்டத்தின் கண்களுக்குக் குற்றவாளியாக தெரியும் அவர்கள் உள்துறை அமைச்சுக்குக் குற்றவாளியாக தெரியவில்லையா?
நம்பாதவன்: உத்துசானுக்கு புத்தி வரவே வராது. அம்னோ அதன் ‘அருட்தந்தையாக’ இருக்கும்வரை, புறம் பேசுவதும் நிந்தனை செய்வதும் தொடரும்.
நீதிமன்றங்கள் அதன் பிரசுர உரிமையைப் பறிப்பது போன்ற கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அதைச் செய்ய மாட்டார்.ஏனென்றால் அவர், அம்னோ ஆள்.
சிஏடி நேசன்: ரிம70ஆயிரத்தை பக்காத்தானுக்குக் கிடைத்த நன்கொடையாக வரவு வைக்க வேண்டியதுதான்.
முஷிரோ: தேர்தல் நேரத்தில் பக்காத்தானுக்கு முடிந்தவரை அதிகபட்ச சேதம் உண்டாக்குவதுதான் உத்துசானின் நோக்கம். கர்பாலுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கும் தொகை சிறியதுதான். இப்படிப்பட்ட அபாண்டங்களை மீண்டும் கூறக்கூடாது என்ற அச்சத்தை உண்டாக்க அது போதுமானதல்ல.
பெயரிலி_5fb: மாணவப் பருவத்தில், அதன் அழகான மலாய்மொழிக்காகவும் பகாசா மலேசியாவிம் நல்ல தேர்ச்சி பெறுவதற்காகவும் உத்துசான் மலேசியாவை வாசிப்பதுண்டு. இப்போது இலவசமாகக் கிடைத்தால்கூட குப்பையில் போட்டு விடுவேன்.
மூன்டைம்: தொடர்ந்து இழப்பீடுகள் வழங்க வேண்டுமானால் உத்துசானிடம் நிறைய பணம் இருக்க வேண்டும்.
அதன் விற்பனை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கு மாறும் என்றும் தெரியவில்லை. அப்படியானால் உத்துசான் ஒரு நாள் படுத்து விடுமா?
பெயரிலி_3e21: உத்துசான்தான் அம்னோ, அம்னோதான் உத்துசான்.