முன்னாள் கெரக்கான் தலைவர் லிம் கெங் எய்க் காலமானார்

limமூத்த அரசியல்வாதியும் முன்னாள் கெரக்கான் தலைவருமான லிம் கெங் எய்க் இன்று காலமானார். அவருக்கு வயது 73.

1980ம் ஆண்டு தொடக்கம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு அவர் கெரக்கான் கட்சிக்குத் தலைமை தாங்கினார். 2007ம் ஆண்டு அவர் விலகிக் கொண்டார்.

ஒய்வு பெறுவதற்கு முன்னர் அவர் எரிசக்தி, நீர் வள, தொடர்பு அமைச்சராக பணியாற்றினார்.

அவர் காலமானதைத் தொடர்ந்து டிவிட்டர் பக்கத்தில் அனுதாபச் செய்திகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

“காலமான துன் லிம் கெங் எய்க் குடும்பத்திற்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாட்டுக்குப் பேரிழப்பு,” என கெடா கெரக்கான் இளைஞர் தலைவர் தான் கெங் லியாங் தமது டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.