‘தீபக், எது சரியோ அதைச் செய்யுங்கள், அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள்’

deepakநேர்மை குறித்து சந்தேகம் எழாத இன்னொரு நபராக இருந்தால் அபாயத்தை எதிர்கொள்வதற்கு காரணம் உள்ளது. ஆனால் அது நீங்கள் தீபக்; அது தான் பிரச்னையே.”

‘வைர ஆவணங்களை’ ராபிஸியிடம் கொடுத்ததாகக் கூறப்படுவதை தீபக் மறுக்கிறார்

மஹாஷித்லா: அந்த ‘வைர ஆவணங்களை’ பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலிடம் தாம்கொடுத்ததாகக் கூறப்படுவதை கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் மறுத்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் Carpet Raya, Carpet Plus என்னும் தமது நிறுவனங்கள் அந்த ஆபரணங்களுக்குப் பணம் கொடுத்ததை தீபக் மறுக்கவில்லை.

தீபக் மட்டும் தகவல்களை அம்பலப்படுத்தவில்லை என இப்போது தோன்றுகிறது. அத்தகைய லஞ்சங்களைக் கொடுப்பது மீது அவரது நிறுவனங்களைச் சார்ந்த மற்றவர்களும் ஆத்திரமடைந்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் தீபக், நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆதரவு கொடுக்காதது பற்றி நீங்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டாம். நல்ல சிந்தனை கொண்ட மலேசியர்கள் உங்கள் பக்கம் நிற்கின்றனர்.

கோமாளி: தீபக், அரசியல் ரீதியில் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசிக் கொள்வதில் தமக்கு அக்கறையில்லை எனச் சொல்கின்றீர்கள். அதே நேரத்தில் எந்த அரசியல்வாதியும் என்னை ஆதரிக்கவில்லை எனப் புலம்புகின்றீர்கள். ஏமாற்றப்பட்டதால் நீங்கள் உண்மையில் ஆத்திரமடைந்திருந்தால் சரியான பாதையில் சென்றால் ஏன் அரசியல்வாதிகளின் ஆதரவை நாடுகின்றீர்கள் ?

நீங்கள் உங்கள் தகவல்களை அம்பலப்படுத்துங்கள். ராபிஸியும் அவரது குழாமும் அவர்கள் அறிந்த தகவல்களை அம்பலப்படுத்தட்டும். தங்கள் தகவல் உங்களிடமிருந்து வந்ததாக அவர்கள் சொன்னால் மறுத்து விடுங்கள். அவ்வளவு தானே !

இந்த விஷயத்தில் பிரதமர் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு உங்கள் நிறுவனங்கள் ஆபரணங்களை வாங்கியதாக ராபிஸி சொல்கின்றார்.

ராபிஸிக்கு கிடைத்த ஆவணம் உண்மையானதா இல்லையா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது என நீங்கள் சொல்லுங்கள். ஆனால் நீங்கள் ரோஸ்மாவுக்காக ஆபரணங்களை வாங்கியிருந்தால் ஆமாம் என்று சொல்லுங்கள். சட்ட நெளிவு சுளிவுகளுக்குள் மறைந்து கொள்ள வேண்டாம்.

பெர்ட் தான்: பக்காத்தான் தலைவர்கள் உங்களுடன் இணைந்து கொள்வதற்கோ அல்லது வெளிப்படையாகஆதரிப்பதற்கோ தயங்குவதற்கு என்ன காரணம் என உங்களுக்குத் தெரியுமா தீபக் ?  நீங்கள் சொல்வதைப் போல நீங்கள் எரியும் நெருப்பு. யார் அருகே வந்தாலும் -அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும்- எரியூட்டப்படுவர்.

நேர்மை குறித்து சந்தேகம் எழாத இன்னொரு நபராக இருந்தால் அபாயத்தை எதிர்கொள்வதற்கு காரணம் உள்ளது. ஆனால் அது நீங்கள் தீபக்; அது தான் பிரச்னையே.

நீங்கள் பல முறை சொன்னது போல உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள விரும்பினால் நடவடிக்கைகள் மூலம் அதனை நிரூபியுங்கள். உங்கள் அம்னோ எதிரிகளுடனும் பக்காத்தான் தலைவர்களுடனும் பொது மக்களுடனும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை ஆடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் தகவல்களை நேரடியாக தெளிவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துங்கள். இது வரை நீங்கள் வார்த்தைகளை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். அவை உண்மை என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் சொல்வதற்கு உருப்படியாக ஒர் ஆதாரத்தைக் கொடுங்கள். பக்காத்தான் தலைவர்கள் அங்கிருந்து தொடருவார்கள்.

தாய்லெக்: அந்தக் கம்பள வணிகரிடமிருந்து பரபரப்பான தகவலை ராபிஸி எடுத்துக் கொண்டு விட்டார்.மலேசியாவின் தலைமகளுடன் பேரம் பேசுவதற்கு இருந்த இன்னொரு துருப்புச் சீட்டை தீபக் இழந்து விட்டார். காரணம் அந்தச் செய்தி வெளியாகி விட்டது. அதனைத் தாம் கொடுக்கவில்லை என்கிறார் தீபக்.

அடுத்து தாம் அவருக்கு ஆபரணங்களை வாங்கியதையே தீபக் மறுக்கப் போகிறார். அவரது புத்தக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தரப்புக்களுடன் நடத்தும் பேச்சுக்களில் அவருக்குப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் அவர் ராபிஸி மீது பழி போடுகிறார்.

ஆயிஷா: யாரோ ஒரு பெரிய மனிதர் தீபக்-கிற்கு பின்னணியில் நிற்கிறார். மிக அதிகமாக பணயத்தைக்கொண்ட சூதாட்டமாகும் இது. யாரோ ஒருவருடைய எதிர்காலத்தை நாடப்படுத்த தீபக் முயலுகிறார். அந்த யாரோ ஒருவர் இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர் ஆவார்.

உண்மையிலேயே பெரிய மனிதர் ஒருவரைத் தீபக் தமக்கு ஆதரவாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்காது.

அடையாளம் இல்லாதவன்#12566075: தீபக் நடத்தும் நாடகத்தைப் பொறுத்த வரையில் கீழ் வரும் விஷயங்கள்மீது மலேசியர்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும்

1. தீபக் பிரதமர் நஜிப் ரசாக், ரோஸ்மா ஆகியோருடனான தமது தொடர்புகள் பற்றி உண்மையான முழு விவரத்தையும் தரும் வரையில் அவரைப் பற்றி தீர்ப்புச் சொல்ல வேண்டாம்.

2. நஜிப், ரோஸ்மா மீது பழி போட்டுக் கொண்டு அம்னோ சம்பந்தப்பட்ட மற்ற ஊழல் விஷயங்களை மறந்து விட வேண்டாம். அம்னோவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் அவரது கும்பலும் அதனைத் தான் விரும்புகின்றனர்.

3. தீபக் நாடக முடிவு எப்படி இருந்தாலும் அம்னோ/பிஎன் 13வது தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும்

TAGS: