பிரபாகரன் – கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!

Kamalposters1Aஇந்தியாவின் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுழுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான  சுவரொட்டிகளிலேயே  இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளில்  நடிகர் கமல்ஹாசனை கலையுல போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனை தமிழினத் தேசியத் தலைவர் பிரபாகரன் எப்போதும் சந்தித்ததே கிடையாது. இது போலியான புகைப்படம். சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்காக கமல்ஹாசனின் ரசிகர் கூட்டம்மொன்று இச்செயலை புரிந்துள்ளது. இது கண்டித்தக்க ஒன்றாகும்.

கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமே. கோடி கோடியாக தமிழர்களின் பணத்தை தனது படங்கள் மூலம் சுருட்டியவர். தவிர அவர் எந்த வகையிலும் தமிழர்களுக்காக பாடுபடவில்லை.

ஆனால், பிரபாகரன் உலகத் தமிழர்களுக்கே அடையாளம் கொடுத்த தமிழ் இனத் தலைவன், தமிழ் இனத்தை காக்க வந்த போர் வீரன். அவரோடு கமல்ஹாசனா? இதை எங்களால் பொறுத்துக் கொள்ளமுடியாது என தமிழ் உணர்வாளர்கள் கொதித்து போயியுள்ளனர்.

திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியை அகற்றுவதற்கான நடவடிக்கையில் தமிழர் இயக்க உணர்வாளர்கள் களம் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.