தமிழரின் மக்கள்தொகை 11 விழுக்காடு உயர்வு; சிங்களவரின் மக்கள்தொகையில் வீழ்ச்சி

malaiyagamஇலங்கையின் மத்திய மாநிலம் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் மக்கள்தொகை 11 விழுக்காட்டால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் தொகை கணிப்பீட்டுத் துறையால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது.

2007-ஆம் ஆண்டில் சிங்கள் மக்களின் மக்கள்தொகை 46.2 விழுக்காடாகவும், தமிழ் மக்களின் மக்கள்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது.

ஆனால் தற்போது சிங்கள் மக்களின் மக்கள்தொகை 39.59 விழுக்காடாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 விழுக்காடாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்களவர்களின் மக்கள்தொகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், காணிப் பிரச்னை, தொழில் பிரச்னை, அரசியல் கலாசார ரீதியில் உதாசீனமான நிலைமை போன்ற காரணிகளினாலே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

TAGS: