தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை

jaffna_student_protest1இலங்கையில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை சிங்கள அரசு விடுதலை செய்துள்ளது.

விடுதலைப் போரில் சாவினை தழுவிய விடுதலைப் புலிகளின் நினைவாக வீரவணக்க நாள் கூட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் நடத்தினர். அப்போது புலிகள் ஆதரவுப் பிரசார துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்வதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அவர்களுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களில் இருவர் உரிய மறுவாழ்வு நடவடிக்கைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற இரு மாணவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

TAGS: