தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளைச் சந்திப்பதற்காக இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தனா நேற்று தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
ஒருவார காலம் தமிழ்நாட்டில் தங்கிருந்து அங்குள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளார்.
அத்துடன், தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்கள் பிரதிநிதிகளைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ள டாக்டர் ஜயலத் ஜயவர்தனா, சென்னையிலுள்ள ஸ்ரீ ராமசந்திர பல்கலைக்கழகத்தின் வேந்தர் உள்ளிட்ட மருத்துவ பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.