கண்டனங்களை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுப்பதில்லை

Navanethem_Pillayஎந்த கண்டனங்களையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இறுதியாக சண்டே லீடர் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானமை குறித்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது. இதற்காக நாள்தோறும் சர்வதேசத்தினால் கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன.

எனினும் அதனை இலங்கை அரசாங்கம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும் இலங்கை அரசாங்கம் அதனை உரியமுறையில் நிறைவேற்றவில்லை. எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்சசியளித்துள்ளதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு இலங்கை அரசாங்கம் பிரத்தியேக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பை ஏற்பாடு செய்யப் போவதாகவும் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சண்டேலீடர் பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

TAGS: