ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் சீட்டாட்டம் (poker) ஆடுகின்றது!

weythaஉங்கள் கருத்து : “அந்த சீட்டாட்டத்தில் வெற்றி பெறுவதற்கு போதுமான சீட்டுக்கள் ஹிண்ட்ராப்-பிடம் இருக்கின்றதா என்பது சந்தேகமே. 2008ல் ஹிண்ட்ராப்புக்கு இருந்த பெரிய செல்வாக்கிற்கு அப்போதைய சூழ்நிலையே காரணம்”

ஹிண்ட்ராப் ஆதரவு இல்லாவிட்டால் பக்காத்தான் 25 எம்பி-க்களை இழக்கும்.

கலா: அஸ்தமித்துக் கொண்டிருக்கும் பிஎன் ஆட்சியிடமிருந்து அதிகமான இடங்களைப் பிடிப்பதற்கு முயலும் கூட்டணியை பக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதிநிதிக்கிறார். அவற்றில் சில இடங்கள் மசீச, மஇகா, அம்னோ வைத்துள்ளவையாக இருக்கும்.

மஇகா வைத்துள்ள இடங்களில் போட்டியிட ஹிண்டராப் நோக்கம் கொண்டிருந்தால் அது பக்காத்தானில் இப்போது உள்ள தொண்டர்களை நிச்சயம் பாதிக்கும். என்றாலும் ஹிண்ட்ராப்பை அலட்சியம் செய்வது,  இந்தியர்கள் முடிவு செய்யக் கூடிய நிலையில் உள்ள தொகுதிகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அதனால் பக்காத்தான் ஹிண்ட்ராப் தலைமைத்துவங்கள் விவேகமாக செயல்பட வேண்டும். பிஎன்- பக்காத்தான் ஆகியவற்றுக்கு இடையில் பக்காத்தானையே ஹிண்ட்ராப் ஆதரிக்க வேண்டும் என்பது  தெளிவான விஷயமாகும்.

பிஎன் -னை நம்ப முடியாது. அதன் தோற்றத்துக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. அது இனவாதத்தன்மையைக் கொண்டது. அதனால் அந்தக் கூட்டணி சிறிது சிறிதாக மங்கி வருகின்றது. பிஎன் ஆட்சி மீது நம்பிக்கை வைப்பது முழு முட்டாள்தனமானது.

அன்ஸ்பின்: ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் சீட்டாட்டம் (poker) ஆடுகின்றது. அந்த சீட்டாட்டத்தில் வெற்றி பெறுவதற்கு போதுமான சீட்டுக்கள் ஹிண்ட்ராப்-பிடம் இருக்கின்றதா என்பது சந்தேகமே. 2008ல் ஹிண்ட்ராப்புக்கு இருந்த பெரிய செல்வாக்கிற்கு அப்போதைய சூழ்நிலையே காரணம். அந்த நேரத்தில் நிலவிய பல கடுமையான அம்சங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாரம்பரியமாக பிஎன் -னுக்கு ஆதரவாக இருந்த இந்தியர் வாக்குகளை பக்காத்தானுக்கு ஆதரவாக மாற்றி விட்டன.

அந்த அம்சங்களில் சில: (1) சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டது. (2) ஹிண்ட்ராப் பேரணி (3) பல ஹிண்டரப் தலைவர்கள் இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது (4) பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான வழக்கில் ஹிண்ட்ராப் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மலேசிய இந்தியருக்கும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும் என்ற வாக்குறுதி.

ஆனால் இப்போது அந்த சூழ்நிலைகள் இல்லை. அதனால் மீண்டும் சூறாவளி வீசுமா என்பது நிச்சயமில்லை.

கறுப்பு வீரன்: பி வேதமூர்த்தி, மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்துக்கு போராடி வெற்றி பெற்றவர். அதனால் தாம் பிரதமராக வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கவே இல்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தவில்லை.

உங்களுடைய நோக்கங்கள் நல்லதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலைக்குப் புறம்பாக தொகுதிகள் வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பது மலேசிய இந்தியர்களுக்கான உங்கள் போராட்டத்தை பாதிக்கிறது.

பெர்ட் தான்: 2007-2008ல் இருந்ததைப் போல இந்திய சமூகம் இப்போது அரசாங்கத்துடன் போரிடவில்லை,”என வேதமூர்த்தி சொல்கிறார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியில் இந்தியர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா ? பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையே நாம் காண்கிறோம்.

ஒத்துழைப்புக்கான ஹிண்டராப் நிபந்தனைகளை பக்காத்தான் ஏற்க மறுத்தால் இந்தியர்களுக்கு பிஎன் தான் இந்தியர்களுக்கு உள்ள நம்பிக்கை என எண்ணி ஹிண்டராப் தலைவர்கள் தங்கள் ஏமாற்றிக் கொள்கின்றனரோ ?
ஐம்பது ஆண்டுகள் முடிந்தும் பிஎன் மாறவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா ? அது சிறுபான்மை இனமான இந்தியர்களுக்குச் சாதகமாக எதனையும் செய்யப் போவதில்லை. உங்கள் நிலையை தெளிவுபடுத்துங்கள். உங்கள் ஆதரவு பக்காத்தானுக்கா அல்லது பிஎன் -னுக்கா ?

சாமுவேல் ஜான்சன்: ஹிண்ட்ராப் உதயமானதற்குப் பின்னரே இந்த நாட்டில் இந்தியர்களுக்கு சிறிதளவு அரசியல் வலிமை கிடைத்தது. அது உருவாகி ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஹிண்ட்ராப் ஏன் தனது பேராளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பக் கூடாது ? என் ஆதரவு ஹிண்ட்ராப்புக்கே.

டாக்டர் சின் து லான்: தான் விரும்புவதைப் பெறுவதற்கு ஹிண்ட்ராப் பேச்சு நடத்தும் முறை இது தான் என்றால் அதனை பக்காத்தான் மறந்து விடுவது நல்லது என நான் சொல்கிறேன்.

நான் பக்காத்தானாக இருந்தால் இடங்களை இழந்தாலும் பரவாயில்லை என ஹிண்ட்ராப் மருட்டல்களுக்கு இணங்க மாட்டேன்.

கேஎஸ்டி: பிஎன் வீழ்ச்சி காண நான் 55 ஆண்டுகளாகக் காத்திருந்த போதிலும் இது போன்ற மருட்டல்களுக்குபக்காத்தான் பணியக் கூடாது. ஹிண்ட்ராப்பை விட்டு விடுங்கள் என நான் சொல்கிறேன்.

அந்த இரண்டு ஹிண்டராப் சகோதரர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களைக் காட்டிலும் சிந்திக்கும் பெரும்பாலான இந்தியர்கள் விவேகமானவர்கள். அவர்கள் அடுத்த மஇகா-வாக விரும்புகின்றனர்.

 

TAGS: