நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்கலங்கவைத்த போர்க்குற்ற ஆவணப்படம்!

sri_lanka_war_civilians_killedநேற்று இந்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. (காணொளி)

இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின் வலுமிக்கதொரு சாட்சியமாகவும் சிறிலங்கா அரசுக்கு பெருந்தலையிடியாகவும் இந்த ஆவணப்படம் உள்ளது.

அண்ணளவாக 20 நிமிடங்கள் ஓடக்கூடியவகையில் அமைந்துள்ள இந்த ஆவணப்படம் புதுடெல்லியில் உள்ள அரசியலமைப்பு கழகத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு திரையிடப்பட்டிருந்தது.

இலங்கையில் நடைபெற்ற படுகொலை தொடர்பில் ஓர் சர்வதேச சுயாதீன விசாரணையொன்று அவசியம் என இந்த ஆவணப்படத்தினை கண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ற் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்கலங்கிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்.

இந்திய அரசு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன்னின்று பங்காற்று வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட டி.ராஜா இந்திய அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.