13வது பொதுத் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கான மக்கள் முற்போக்குக் கடசியின் (பிபிபி) வேட்பாளர் பட்டியல் பாரிசான் நேசனலிடம் (பிஎன்) சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெரும்பாலோர் புதுமுகங்கள் ஆவர்.
அந்தத் தகவலை அந்தக் கட்சியின் முதுநிலை உதவித் தலைவர் மாக்லின் டென்னிஸ் டி குருஸ் வெளியிட்டார்.
என்றாலும் அந்த வேட்பாளர்களுடைய பெயர்களையோ வேட்பாளர் எண்ணிக்கையையோ தருவதற்கு அவர் மறுத்து விட்டார்.
தனது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்கள் என பிபிபி நம்பிக்கை கொண்டுள்ளதாக மட்டும் தகவல், தொடர்பு, பண்பாட்டுத் துணை அமைச்சருமான மாக்லின் சொன்னார்.
என்றாலும் 13வது பொதுத் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் இறுதி முடிவு பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் ரசாக்கைச் சார்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் நேற்று ஜிஞ்சாங் செலத்தான் குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த Jalinan Mesra 1Malaysia நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
2008 பொதுத் தேர்தலில் பேராக்கில் பிபிபி தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியிலும் பாசிர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டது. ஆனால் இரண்டிலும் தோல்வி கண்டது.
-பெர்னாமா