சிறிலங்கா அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதலின் தொடர்சியாக இன்று சிறிலங்கா அரச ஊடக இணையம் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இணையத்தினை ஊடறுத்துள்ள நபர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து என குறிப்பிட்டு அவுஸ்றேலிய தொலைக்காட்சியில் வெளிவந்திருந்த சிங்கள அரசின் போர்குற்றங்கள் தொடர்பிலான விபரண காணொளித் தொகுப்பினை இணைத்துள்ளதோடு அனைவருக்கும் நீதிவேண்டுமென தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிறிலங்கா அரசின் 50க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மீதான இவ்வகை ஊடறுப்புக்களினால் திகைத்துப்போயுள்ள சிங்கள அரசுக்கு இன்றைய இந்த ஊடறுப்பு அதிர்சியனை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் பாலசந்திரன் மீதான சிங்கள இராணுவத்தினரது படுகொலைக்காட்சிப்பதிவுகள் சிறிலங்காவின் போர்குற்றங்கள் சாட்சிப்பதிவுகளாக சர்வதேசத்தின் கவனத்தினை பெற்றுள்ள நிலையில் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளான இணையத்தில் போர்குற்றங்கள் தொடர்பிலான காணொளிகள் வெளிவந்துள்ளமை சிங்கள அரசு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.