இலங்கை இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் : TGTE

transnational government of tamil eelamஇலங்கைத் தீவினை மையப்படுத்திய அனைவரினது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு சவால் மிகுந்த இராஜதந்திரக் களமாக ஐ.நா மனித உரிமை பேரவை அமைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கொன்றில் இலங்கை அரசாங்கத்தினை அம்பலப்படுத்தவும், தனிமைப்படுத்தவும், தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை வலியுறுத்தியும் ஐ.நா மனித உரிமைச் பேரவையில் பல நாடுகளில் இருந்தும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கூடிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைத் தீவில் போரின்போதும், போரின்பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனஅழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவை விகாரங்களுக்கான நா.தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர் மற்றும் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவிலும் வெவ்வேறு நாடுகளிலும் தங்களது இராஜதந்திரச் செயற்பாடுகளைத் பல்வேறு மட்டங்களிலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த அந்தந்த நாடுகளுக்கு  இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தும் வகையில் தபால் அட்டைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது.

TAGS: