பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து ஆயுதமேந்திய பிலிப்பினோ பயங்கரவாதிகளைத் தேடித் துடைத்தொழிக்கும் நடவடிக்கை தொடருகின்றது.
லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பெர்னாமா கூறியது.
கம்போங் தண்டுவோ-வைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டார் சுற்றளவுக்கு Ops Daulat (டாவ்லாட் நடவடிக்கை) மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் பெல்டா சஹாபாட் பாதுகாப்புப் படைகளுடைய கடுமையான கண்காணிப்பில் இருந்து வருகின்றது.
என்றாலும் பெல்டா நிலக் குடியேற்றப் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை வழக்கம் போல மேற்கொள்கின்றனர்.
இதனிடையே கம்போங் தண்டுவோ-விலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லஹாட் டத்து நகரத்தில் அமைதி நிலவுகிறது. எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
பெல்டா சஹாபாட்டுக்குச் செல்லும் சாலையில் போலீஸ் சாலைத் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிக்குள் செல்லும் எல்லா ஊடகவியலாளர்களும் தங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
செம்போர்ணாவிலும் நிலை அமைதியாக உள்ளது. பல மளிகைக் கடைகளும் உணவு விடுதிகளும் வழக்கம் போல இயங்குகின்றன.
-பெர்னாமா