பாதுகாப்புப் படைகளால் நேற்று கொல்லப்பட்ட சூலு இராணுவ ஜெனரல், ஊடுருவல்காரர்களின் தலைவரும் சூலு சுல்தான் ஜமாலுல் கிராம் III-இன் சகோதரருமான அஸிமுடி கிராம் அல்ல என்று தேசிய போலீஸ்படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெரிவித்துள்ளார்.
“அது அவர் (அஸிமுடி) அல்ல… அது (கண்டெடுத்த உடல்) அவர்களின் இன்னொரு தலைவருடையது”, என இன்று காலை பெல்டா சஹாபாட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
புதன்கிழமை மலேசியப் பாதுகாப்புப் படையினர் 30 ஊடுருவல்காரர்களுடன் சூலு ஜெனரல் ஒருவரையும் கொன்றது பற்றி விவரித்தபோது இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து கொல்லப்பட்டவர் அவர்களின் தலைவர்களில் ஒருவர் என்ற முடிவுக்கு பாதுகாப்புப் படைகள் வந்தன என்று கூறிய இஸ்மாயில் அவர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.