அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

TNA-sampanthanஇலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இராணுவமயமாக்கல், தொடர்ந்து வருகின்றது. காணி அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது. அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் படையினர் வசம் உள்ளன. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு, திருகோணமலையில் சம்பூர் பகுதி உட்பட பெரும் பகுதிகள் படையினர் வசமே உள்ளன என்றார்.

TAGS: