“நீங்கள் உண்மையாகவும் கௌரவமாகவும் உங்கள் வேலையை செய்தால் ஆர்சிஐ முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை”
இசி: ஆர்சிஐ நிறைவு பெறுவதற்கு முன்னர் பொதுத் தேர்தல் வந்தால் அது துரதிர்ஷ்டமானது
தோலு: தேர்தல் ஆணையத் (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அவர்களே, சபா ஆர்சிஐ
என்ற அரச விசாரணை ஆணையம் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடிகளைச் சரி செய்ய பிஎன் ஆட்சியில் சொந்தமாக நடவடிக்கை எடுக்காது எனச் சொல்ல வருகின்றீர்களா ? அப்படித் தான் நானும் நினைக்கிறேன்.
தான் சொந்தமாக விரிவாகவும் தொடர்ச்சியாகவும் உருவாக்கி விட்ட ஆவி வாக்காளர்களை இசி ஏன் நீக்கப்
போகிறது ? அது இசி-யின் பெருந்திட்டத்தில் ஒரு கூறு ஆகும்.
ஆகவே வான் அகமட் அவர்களே ஏமாற்றம் தெரிவிக்க வேண்டாம். உண்மையில் ஆர்சிஐ-யின் தவணைக்
காலம் நீட்டிக்கப்பட்டது போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது தான் உண்மை.
நல்ல மனிதர்கள்: நீங்கள் உண்மையாகவும் கௌரவமாகவும் உங்கள் வேலையை செய்தால் ஆர்சிஐ அல்லது நீதிமன்ற முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
வாக்காளர் பட்டியல் குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டதும் நீங்கள் உடனடியாக அதனைக் கவனித்திருக்க
வேண்டும். ஆனால் நீங்கள் பிஎன் கைப்பாவை என்பது தான் ஒரே பிரச்னை.
நல்ல தூதன்: அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்ததால் ஆர்சிஐ
அமைக்கப்பட்டது. இது வரை சாட்சியமளித்தவர்கள் அதனை உறுதி செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை
சோதிக்க அது போதுமானது.
வான் அகமட்டின் முட்டாள்தனமான அறிக்கைகளுக்கு செவி சாய்க்க மலேசியர்கள் மடையர்கள் அல்ல.
வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என பெர்சே நெருக்குதல் தொடுக்க வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்#70866269: பெரும்பான்மை மக்கள் சொல்வது இது தான்: ‘மோசடியான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த வான் அகமட் அனுமதித்தால் அது துரதிர்ஷ்டம்.’
அது நிகழ்ந்தால் இது வரை நிகழ்ந்திராத பெரிய துரோகமாக இருக்கும்.
மலேசியா ஏபியூ: வாக்காளர் பட்டியலைத் தூய்மை செய்யும் அதிகாரம் இசி-க்கு உள்ளது. அது ஆர்சிஐ
அல்லது நீதிமன்ற முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
நீங்கள் அதனைச் செய்ய விரும்புகின்றீர்களா இல்லையா என்பது தான் இங்குள்ள விஷயம், அது உங்களால்
முடியுமா முடியாதா என்பதல்ல. காரணம் தேர்தல் சட்டத்தின் கீழ் உங்களுக்கு அந்த அதிகாரம்
கொடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய இனம்: ‘துரதிர்ஷ்டம்’ ? பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சபா ஆர்சிஐ தனது பணியை நிறைவு செய்யாது என்ற தகவல் இசி-க்கு குறிப்பாக கறை படிந்த அதன் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப்பிற்கும்
துணைத் தலைவர் வான் அகமட்டுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்திருக்க வேண்டும்.
ஏனெனில் மகாதீர்/பிஎன் ஆட்சி, தேர்தல் ஆணையம், தேசியப் பதிவுத் துறை ஆகியவை நடத்திய
பெரிய தேர்தல் மோசடிகளுக்கு நிறைய ஆதாரத்தை ஆர்சிஐ,பெற்று வருகின்றது. அந்த மோசடிகள் மூலம்
நூறாயிரக்கணக்கான ‘திடீர் வாக்காளர்கள்’ சபாவில் கடந்த 25 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளனர்.
அவை பெரிய தேசத் தூரோகமாகும். அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
வெர்சே: ஊடுருவல்காரர்கள் நமது மண்ணில் ஆயுதங்களுடன் இறங்கியுள்ளனர். அர்ப்பணிப்பு மிக்க நமது
போலீஸ் படையில் பலர் கொல்லப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதற்கு பின்னரே நாம் நம்மை
தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் எனச் சொல்வதைப் போல அது உள்ளது.
அது எத்தகையை போர் ‘சிந்தனை என்பதைப் பார்த்தீர்களா ? வாக்காளர் பட்டியலில் 28 விழுக்காடு வரையில்
தவறுகளை ஏற்றுக் கொள்ளலாம் எனச் சொல்வதற்கு அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும் ?
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கோமாளியைப் போல நடந்து கொண்டார்.
இப்போது இசி-யில் இன்னொரு கோமாளி இருக்கிறார்.
அத்தகையவர்கள் காரணமாக மலேசியர்களைக் கண்டு அனைத்துலக சமூகம் எள்ளி நகையாடுகிறது.
அடையாளம் இல்லாதவன்#02382443: ஒரு குற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்கு நாம் நீதிமன்றம் குற்றம்
புரியப்பட்டுள்ளது எனச் சொல்லும் வரை காத்திருக்க வேண்டுமா ?
என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு அதனைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.