அம்னோவில் சிந்தனைகள் வற்றிவிட்டன, அதனால் அதிகமான செக்ஸ் வீடியோக்கள் வெளி வரும்

papagomo“அம்னோவைத் தோற்றுவித்தவர்கள் நல்ல தார்மீக சிந்தனைகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று  அந்தக் கட்சியில் தார்மீகம் என்பதே இல்லை. அடாவடித்தனம், இனவாதம், செக்ஸ் வீடியோக்கள்  ஆகியவற்றையே அது நாடுகின்றது”

பிகேஆர்: செக்ஸ் வீடியோக்களில் நுருல் இஸ்ஸா, காலித் ‘சேர்க்கப்பட்ட’ வீடியோக்கள் வெளி வரலாம்

புகழேந்தி: அம்னோ மலிவான அரசியல் தந்திரங்களை கையாள வேண்டிய அளவுக்கு விரக்தி அடைந்துள்ளது  வருத்தமளிக்கிறது. புதிய நல்ல கொள்கைகளை அது ஏன் அறிவிக்கக் கூடாது ?

நாங்கள் ஆபாசப் படங்களை விரும்பவில்லை. நமது நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்களைக் காண விரும்புகிறோம். மலிவான, தரக்குறைவான இந்த தந்திரங்களினால் நான் பிஎன் -னையும் அம்னோவையும்
வெறுக்கிறேன்.

எச்ஒய்எல்: ஆபாச வீடியோக்களை வாங்குவதும் ஆபாச இணையத் தளங்களுக்குச் செல்வதும் சட்ட விரோதமாகும். ஆனால் ஆபாசத்தைப் போன்ற வீடியோக்களை வெளியிடுவது எப்படிச் சட்டப்பூர்வமானதாகும். ஆபாசப் படங்களை காட்டுவதற்காக பிஎன் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#71627369: அவர்கள் எல்லா வீடியோக்களையும் காட்டட்டும். என் வாக்கு பக்காத்தான் ராக்யாட்டுக்குத் தான். இந்த மோசமான ஆட்சிக்கு மலேசியர்கள் முடிவு கட்ட வேண்டும்.

அமோக்கர்: விவாதம் நடத்துவது மலேசியப் பண்பாடு அல்ல. ஆனால் செக்ஸ் வீடியோக்களை வெளியிடுவது மலேசியப் பண்பாடா ?

எம்எஸ்எம்-ஐ புறக்கணியுங்கள்: அம்னோ தொடர்ந்து வீடியோக்களை வெளியிடட்டும். ஆனால் மக்கள் அதனை நம்பப் போவதில்லை. அவை அதனையே திருப்பி அடிக்கப் போகின்றன.

ஹாக்ஸ்: நாட்டு நிர்வாகத்திலிருந்து நாம் அம்னோ/பிஎன் -னை வெளியாக்க வேண்டும். அவை ஆபாசப் படங்களிலும் அவதூறான வீடியோக்களிலும் கவனம் செலுத்தட்டும். ஒரு வேளை அவற்றுக்கு ஹாலிவுட் விருதுகள் கூடக் கிடைக்கலாம்.

WTF: உண்மையான பிரச்னைகள் ஏதுமில்லையா ? மற்றவர்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் மட்டும் தான் ஆர்வமா ?

ஊழலையும் தேசத் துரோகத்தையும் பக்காத்தான் மக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் போது பக்காத்தான் தலைவர்களைப் போன்று தோற்றமளிக்கும் மக்களைக் கொண்ட செக்ஸ் வீடியோக்களை பிஎன் வெளியிடுகின்றது.

கெட்டிக்கார வாக்காளர்: செக்ஸ் வீடியோக்கள் வாக்குகளைத் திசை திருப்ப உதவும் என பிஎன் தலைமைத்துவம் கருதினால் அது மிகவும் முட்டாள்தனம். உண்மையில் நேர்மாறாகத் தான் நிகழப் போகிறது.   பொது மக்களுடைய சகிப்புத் தன்மைக்கும் ஒர் எல்லையுண்டு.

சிஎஸ்113: பிஎன் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும். அதனிடம் ஏற்கனவே சிந்தனைகள் வற்றி விட்டன. தீய, கறை படிந்த தந்திரங்களில் அது ஈடுபடுவதில் வியப்பில்லை. இது போன்ற காலத்திற்கு ஒவ்வாத  முட்டாள்தனமான தந்திரங்களுக்கு மக்கள் பலியாக மாட்டார்கள். அவர்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கி  விட்டனர்.

தே தாரேக்: அந்த அம்னோ ஏஜண்டுகள், செக்ஸ் ‘கிறுக்கர்கள்’. அம்னோவைத் தோற்றுவித்தவர்கள் நல்ல தார்மீக சிந்தனைகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அந்தக் கட்சியில் தார்மீகம் என்பதே இல்லை. அடாவடித்தனம், இனவாதம், செக்ஸ் வீடியோக்கள் ஆகியவற்றையே அது நாடுகின்றது.

TAGS: