தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா-வின் மனைவி வழக்குரைஞருடன் தொடர்பு கொண்டார்

americkதனிப்பட்ட துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் மனைவி ஏ செந்தமிழ் செல்வி, தமது மௌனத்தைக் கலைத்து பாலா-வின் வழக்குரைஞர் அமெரிக் சித்து-உடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தமக்கு ‘கால அவகாசம்’  தேவைப்படுவதாக அவர் அமெரிக் -கிடம் கூறினார்.

செல்வி இன்று தம்முடன் தொடர்பு கொண்டதாகவும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாலா-வின் 16வது நாள் பிரார்த்தனைக்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் தம்மை ‘மன உளைச்சலுக்கு’ உள்ளாக்கி விட்டதாகவும் செல்வி  தம்மிடம் சொன்னதாக அமெரிக் மலேசியாகினியிடம் நேற்று தெரிவித்தார்.

செல்வி இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை என்றாலும் முதலாவது சத்தியப் பிரமாணத்தை செய்வதற்கு வழக்குரைஞர்கள் தமது கணவருக்குப் பணம் கொடுத்ததாக கூறப்படுவது மீது தாம் போலீஸில் புகார் செய்யப்  போவதா சனிக்கிழமை குறுஞ்செய்தி தகவல் பரவிய பின்னர் அதிலிருந்து ‘விடுபட’ வேண்டியிருந்ததாக செல்வி அமெரிக்-கிடம் கூறினார்.

TAGS: