“நீண்ட நாள் பார்க்கவில்லை அதனால் நீண்ட நாளாக எதையும் கேட்கவில்லை”- கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் டிஏபி-க்கு விட்டுக்கொடுத்த பின்னர் இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கண்ணில் படாமல் மறைந்திருந்த ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் முதன்முதலாக உதிர்த்த முத்தான மொழி இது.
இன்று தம் மெளன விரதம் கலைந்த சுவா, தமக்குரிய நாடாளுமன்றத் தொகுதியை எடுத்துக்கொண்டிருக்கும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.
“கேலாங் பாத்தாவில் வெற்றி கொள்ள முடியும். என்னிடமிருந்து அத்தொகுதியை லிம் கிட் சியாங் எடுத்துக்கொண்டிருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
“அவர் நேர்மையானவர், கெளரவமானவர், நாட்டில் மாற்றத்துக்காக தொடர்ந்து போராடி வருபவர்”, என சுவா இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கிட் சியாங்கை ஆதரிக்குமாறு அவர் தம் ஆதரவாளர்களையும் கேட்டுக்கொண்டார்.