WWW1 கார் எண் தகடு மீதான பிரச்னை தொடர்பில் டிவி3 என அழைக்கப்படும் Sistem Televisyen Malaysia Bhd-க்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஸார் ஜமாலுதின் தாக்கல் செய்த 50 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதி இயோ வீ சியாம் அந்த முடிவை இன்று அறிவித்தார். நிஸார் செலவுத் தொகையைக் கொடுக்க
வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார்.
தாம் அரசர் அமைப்பு முறைக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை அளித்த தீய நோக்கம் கொண்ட செய்தியை
டிவி3 தனது பிரதானச் செய்தியில் (Buletin Utama) கடந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி வெளியிட்டதாக தமது
வழக்கில் நிஸார் குறிப்பிட்டிருந்தார்.