செக்ஸ் வீடியோ கறை படிந்த பிஎன் பிரச்சாரத்தின் தொடக்கம்

sex

“அது உண்மையாக இருந்தாலும் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் பல முறை  அந்தத் ‘தந்திரத்தை’ பயன்படுத்தி விட்டார்கள்”

இன்னொரு செக்ஸ் வீடியோ இந்த முறை ஒரு பாஸ் தலைவர் எனக் கூறப்பட்டது

அடையாளம் இல்லாதவன்#36465711: அம்னோவுக்கு எதுவும் விளங்கவே இல்லை. அது தொடர்ந்து செக்ஸ்  வீடியோக்களை வெளியிட வெளியிட அதிகமான மக்கள் அவற்றின் ‘உண்மை நிலை’ குறித்து ஐயம் கொள்ளத்  தொடங்குவர்.

தொடக்கத்தில் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட செக்ஸ் வீடியோ உண்மையாக இருக்கலாம்  என்று கூட நான் தொடக்கத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் தொடர்ந்து வீடியோவுக்குப் பின்னர் வீடியோ,  இப்போது வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்ட வீடியோக்கள் வெளி வர வர அவை அதிகாரத்தை இழக்கும்  அச்சம் சூழ்ந்துள்ளவர்களுடைய வேலையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். அதனை  வேறு வகையாகச் சொன்னால் அவை அவர்களையே திருப்பித் தாக்கப் போகிறது.

மலேசியா ஏபியூ: அவர்கள் அத்தகைய வீடியோவைப் பதிவு செய்ய முடியும் என்றால் அவர்கள் ஏன்
இஸ்லாமிய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து அறையைச் சோதனை செய்து அந்தத் ‘தலைவரை’ கையும்
களவுமாகப் பிடிக்க வேண்டியது தானே ? முன்னாள் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநருக்கு
நிகழ்ந்ததைப் போல.

உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கும். அவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை ? மாறாக அவர்கள் தங்கள்
நேரத்தை எடுத்துக் கொண்டு வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதுவும் சரியான கோணத்தில்.

பாக்மான்: ஊழல், அதிகார அத்துமீறல், கள்ளப் பண வெளியேற்றம், ஆவி வாக்காளர்கள்,
குடியேற்றக்காரர்களுக்கு சட்ட விரோதமாக அடையாளக் கார்டுகளைக் கொடுத்தது போன்ற முக்கிய
விஷயங்கள் 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படுவதை திசை திருப்பும் பொருட்டு அந்த வீடியோ
வெளியிடப்பட்டுள்ளது.

அடையாளம் இல்லாதவன் #19098644: அம்னோவிடம் ஆபாச படங்களைத் தயாரிக்கும் பிரிவு ஒன்றும் முழு  நேரமும் இயங்குவதாகத் தெரிகிறது. அது தோல்வி கண்டாலும் Playboy video மலேசியப் பதிப்பை
வெளியிடலாம்.

நியாயம்: பாப்பாகோமோ யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார். அவர்கள் கேமிராவை அங்கு வைக்க முடியும்
என்றால் என்ன நடக்கப் போகிறது என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் ஏன் சிலாங்கூர்
இஸ்லாமிய விவகாரத் துறையை அழைத்து சோதனை செய்து அவரை கையும் களவுமாகப் பிடிக்கக் கூடாது ?

பின் உண்மையில் கறை படிந்த பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை அவர்கள்  உணரவில்லை. எது உண்மை எது பொய் என்பதை நாமும் சிந்தித்து உணர முடியும்.

குவிக்னோபாண்ட்: அது உண்மையாக இருந்தாலும் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில்
அவர்கள் பல முறை அந்தத் ‘தந்திரத்தை’ பயன்படுத்தி விட்டார்கள். பிஎன் -னுக்கு அது தான் பிரச்னை.

மலேசிய மக்கள்: அத்தகைய வீடியோக்களை எப்படி ஒருவர் (அது அம்னோவா அல்லது பிகேஆர் கட்சியா
)கிராமங்களுக்கு அனுப்ப முடியும் ? நமது அரசியல்வாதிகள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை அவை
காட்டுகின்றன.

தேசியப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க யாரும் தயாராக இல்லை. ஆபாச வீடியோக்களைத் தயாரித்து
விநியோகம் செய்வதில் தான் அவர்கள் நேரத்தைச் செலவு செய்கின்றனர்.

அவர்கள் மக்கள் பேராளர்களா ? உண்மையில் முழு அபத்தம்.

என்ன நடக்கிறது: அந்த வீடியோக்கள் ஆத்திரத்தை மூட்டுகின்றன. இதுவும் மற்றவையும் அம்னோ
‘தயாரித்தவை’ என்பது நிச்சயம். அம்னோ ஆட்கள் மூளையில் செக்ஸ் சிந்தனையைத் தவிர வேறு
ஒன்றுமில்லை.

ஜேஎம்சி: தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் அந்த ஆபாச வீடியோக்களை பிஎன் தலைவர் நஜிப் ரசாக்கும்
பிஎன் -னும் கண்டிக்குமா ? அவர்கள் அதனைச் செய்வார்கள் என நான் எண்ணவில்லை.

வாக்காளர்கள் ஒன்றுபட்டு அவர்களையும் அவர்களுடைய நெறிமுறை இல்லாத அரசியலையும் நிராகரிக்க
வேண்டும். அவர்களை தூக்கி எறிவதற்கு நமக்கு முதன் முறையாக அதிகாரம் கிடைத்துள்ளது. நாம் அதனை
அவசியம் பயன்படுத்த வேண்டும்.

 

TAGS: