ஹிண்ட்ராப் முன்வைத்த அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பிரதமர் நஜிப் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 18) மாலை மணி 6.00 அளவில் பிரிக்பீல்ட்ஸ் விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் நடக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப்புடனான சந்திப்பின்போது கையெழித்திடுவார் என்று கூறும் எஸ்எம்எஸ் செய்தியைப் பலர் பெற்றுள்ளனர்.
அந்த எஸ்எம்எஸ் செய்தியில் விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு மக்களைத் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் பெறுவதற்கு ஹிண்டார்ப்புடன் தொடர்பு கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.