அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவுடன் நேற்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் போரின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா மற்றும் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் பணிக்கு ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.