நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.
உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழினமே ஈழத் தமிழினத்தின் பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாது தமிழீழத்தின் பலமாகவும் உள்ள நிலையில் மலர இருக்கும் தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்.
தமிழீழ சுதந்திர சாசனதத்தினை அச்சத்தோடு சிங்கள அரசு பார்த்து வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் உலகத் தமிழர்களின் ஓர் அங்கமாக விளங்கும் மலேசியத் தமிழர்களும் இந்த சுதந்திர சாசன உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.
ஜக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும் இந்த சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு.
தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வோம் வாரீர்!
சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள :
தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71
ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61
அறிமுகக் கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7